மின் ஒயரை துண்டித்தலாரி சிறைபிடிப்பு
ஈரோடு:இந்துாரில் இருந்து திருப்பூருக்கு ஒரு கன்டெய்னர் லாரி நேற்று சென்றது. சரியாக வழி தெரியாமல் ஈரோடு சாஸ்திரி நகர் மேம்பாலம் வழியே, சாஸ்திரி நகர் குடியிருப்பு பகுதிக்குள் லாரி நேற்று மதியம், ௩:௦௦ மணி அளவில் நுழைந்தது. அங்கு விநாயகர் கோவில் அருகே உயரழுத்த மின் கோபுரம் உள்ளது. அதில் பயன்பாடற்ற மின் ஒயர் தொங்கி கொண்டிருந்தது. அதில் லாரி மோதியதில் ஒயர் வேகமாக ஆடி குடியிருப்பு மின் ஒயரில் மோதியதில், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் லாரியை சிறைபிடித்தனர். தகவலறிந்து சென்ற மின் வாரிய அலுவலர்கள் வீட்டு மின் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.