உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கறுப்பு துணி கட்டி பட்டா கோரி கைது

கறுப்பு துணி கட்டி பட்டா கோரி கைது

ஈரோடு: ஒலகடம் டவுன் பஞ்., 10வது வார்டு பகுதியை சேர்ந்த ஆதிதிரா-விடர் சமூகத்தை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாய், கண்ணில் கருப்பு துணி கட்டி கொண்டு, கலெக்டர் அலுவ-லகத்தில் நேற்று மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: டவுன் பஞ்., 10வது வார்டு பகு-தியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். பட்டா கோரி, பல ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. தற்போது வாய், கண்களை கருப்பு துணியால் கட்டி, மனு வழங்கி வந்துள்ளோம். இவ்வாறு கூறினர். இதையடுத்து கருப்பு துணி கட்டி, ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்த போலீசார், 56 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ