மேலும் செய்திகள்
மூதாட்டியிடம் நகை பறிப்பு
07-Sep-2025
புன்செய்புளியம்பட்டி, :புன்செய்புளியம்பட்டி நகராட்சி திருவள்ளுவர் இணை வீதியை சேர்ந்தவர் பொங்கியம்மாள், 66; கணவர் இறந்துவிட்ட நிலையில் பேரன் ராகுலுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த ஆசாமி, அவர் போட்டிருந்த தங்க கம்மல், மூக்குத்தியை பறிக்க முயன்றான். அவர் கூச்சலிடவே மூதாட்டியை தாக்கி விட்டு ஓடி விட்டான். இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. பட்டப்பகலில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புன்செய்புளியம்பட்டி போலீசார் ஆசாமியை தேடி வருகின்றனர்.
07-Sep-2025