தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பாரதிநகரில், ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய் துறையினர் சில நாட்களுக்கு முன் சென்றனர். அப்போது நில உரிமையாளரின் மகன்கள் தடுத்ததால் போலீசில் புகாரளித்தனர். இதன்படி போலீசார் இருவரை கைது செய்தனர். அப்போது ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, நில உரிமையாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பொன்னுசாமி தாக்கப்பட்டார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க போலீசில் புகாரளித்தார்.இந்நிலையில் பாரதிநகர் உள்ளிட்ட சுற்று வட்டார விவசாயிகள், வன்கொமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கூடாது என, சத்தி தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட முயற்சித்தனர். சத்தி டி.எஸ்.பி., முத்தரசு தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என கூறியதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.