உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மயானத்துக்கு பாதை கேட்டு மறியலில் ஈடுபட முயற்சி

மயானத்துக்கு பாதை கேட்டு மறியலில் ஈடுபட முயற்சி

பவானி, அத்தாணி அருகே குப்பாண்டம்பாளையம் பஞ்., கரட்டூர் பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இறந்தவர்களின் உடலை கரட்டூர் பள்ளம் என்ற இடத்தில் உள்ள வண்டி பாதை வழியாக, நீர்வளத்துறைக்கு சொந்தமான நீரோடை கரையை மயானமாக பயன்படுத்தி அங்கே அடக்கம் செய்து வந்துள்ளனர்.இந்நிலையில், கரட்டூர்பள்ளம் வழியாக நீரோடைக்கு வரும் வண்டிப்பாதை, தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலம் என்பதால், அந்த நிலத்தின் உரிமையாளர், திடீரென அவரது நிலத்தை சுற்றி கம்பிவேலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு போட்டுள்ளார். இதனால் பாதை இல்லாமல் போனது.நேற்று முன்தினம் கரட்டூரை சேர்ந்த, 83 வயது மூதாட்டி இறந்துள்ளார். மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் அவரது உறவினர்கள், கரட்டூர் பள்ளத்தில் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார், குப்பாண்டபாளையம் வி.ஏ.ஒ.,வெங்கடாச்சலம், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கு, கரட்டூர் பள்ளத்தின் கீழ் உள்ள நீரோடை கரைக்கு செல்லும், புறம்போக்கு வண்டி பாதையை இணைக்கும் வகையில், சாலையில் இருந்து டிப்பர் லாரி மூலம் மண்ணை கொட்டி தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இறந்தவர் உடலை எடுத்துக் கொண்டு தற்காலிக பாதை வழியாக மயானம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை