உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி:டெக்னாலஜியால் சிக்கிய ஆசாமி

ஏ.டி.எம்., மையத்தில் திருட முயற்சி:டெக்னாலஜியால் சிக்கிய ஆசாமி

ஈரோடு:ஈரோடு சாஸ்திரி நகர் நால்ரோட்டில் ஒரு தனியார் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 2:20 மணிக்கு மையத்துக்குள் நுழைந்த ஆசாமி, ஸ்க்ரூ டிரைவரால் இயந்திரத்தின் சில பகுதியை உடைத்தார். மையத்தில் இருந்த 'சிசிடிவி' கேமராவுடன், நிறுவன உரிமையாளரின் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது.இந்த காட்சி அவரது மொபைல்போனுக்கு சென்றதால், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போலீசார் தகவல் தெரிவித்த நிலையில், சூரம்பட்டி போலீசார் விரைந்து சென்றனர்.மையத்துக்குள் இருந்தவரை கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். திருச்சி உலகநாதபுரத்தை சேர்ந்த சந்தோஷ், 39; தற்போது ஈரோடு சாஸ்திரி நகர் வாய்க்கால் மேட்டில் வசிப்பது தெரிய வந்தது. நான்கு மாதங்களுக்கு முன் வந்துள்ளார். கிடைக்கும் வேலைக்கு செல்வார். மனைவி, மகனை பிரிந்து வாழ்கிறார். அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருச்சியில் இரு திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை