கவன ஈர்ப்பு போராட்டம்
பவானி:பவானி நகராட்சியில் 11வது வார்டு தேவாபுரத்தில், காவிரிஆற்றங்கரையோரம், 15 கோடி ரூபாய் மதிப்பில் திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இத்திட்டம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தை அவமதித்து பவானி நகராட்சி நிர்வாகம் பணி மேற்கொண்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்து, பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பவானி-அந்தியூர் பிரிவில் தேவாபுரம் சேவை மையம் சார்பாக நேற்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.