சாலையோர மரங்கள் ஏலம்
தாராபுரம்: தாராபுரத்தில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகத்தில், சாலையோர மரங்கள் ஏலம் விடுதல் நேற்று நடந்தது. இதில் காங்கேயம் ரோட்டில் இருந்த, 397 மரங்கள், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்; பழனி ரோட்டில் இருந்த, 762 மரங்கள், 12 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது. சாலை விரிவாக்க பணிக்-காக, மரங்கள் ஏலம் விடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.