உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் துணிகர திருட்டு

கோவிலில் துணிகர திருட்டு

அந்தியூர்: வெள்ளித்திருப்பூர் அருகே சொக்கநாதமலையூரில் தவசி மாரி-யம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஆசாமிகள், அம்மன் சிலை கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க தாலி மற்றும் உண்டியலை திருடினர். கோவிலுக்குள் வைத்திருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்-கையும் எடுத்து சென்றனர். திருடப்பட்ட உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து கொண்டு வீசியுள்ளனர். உண்டியலில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்திருக்கலாம் என தெரிகிறது. வெள்-ளித்திருப்பூர் போலீசார் களவாணிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ