மேலும் செய்திகள்
பெல்லட்டி ஊராட்சிபள்ளி ஆண்டு விழா
28-Mar-2025
தாராபுரம்:தாராபுரத்தில் அலங்கியம் ரோட்டில் உள்ள அரோபிந்தோ வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ஜோகோ ஸ்கூல் ஆப் லேர்னிங் அமைப்பு தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி பங்கேற்றார். இன்றைய கல்விக்கு புதிய பரிமாணங்களை வழங்கும் வகையில் பேசினார். பள்ளி தாளாளர் வினிதா கோவிந்தசாமி, பண்டைய இந்திய கல்வியியல் முறை, அதன் உண்மை நோக்கம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், 900க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்ற நாடகம், நாட்டியம், பாடல், யோகா, சிலம்பம், களரி உள்ளிட்ட மரபு சார்ந்த கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
28-Mar-2025