உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாளர் மருந்தியல் கல்லுாரிக்கு விருது

வேளாளர் மருந்தியல் கல்லுாரிக்கு விருது

ஈரோடு:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழக-2025ம் ஆண்டிற்கான ஆராய்ச்சி தினம் பல்கலை கழகத்தில் கொண்டாடப்பட்டது.ஈரோடு வேளாளர் மருந்தியல் கல்லுாரியை, இந்தாண்டுக்கான மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக, மாநிலத்தின் முதலிடத்தை பிடித்ததற்காக, தமிழ்நாடு மருத்துவ சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் சுப்பிரமணியன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழக துணைவேந்தர் முனைவர் நாராயணசாமி, கல்லுாரி முதல்வர் சரவணகுமாரிடம் சான்றிதழ் வழங்கினர். கல்லுாரி நிர்வாகம் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்களை மனதார பாராட்டியது. மேலும் விழாவில் கல்லுாரி மேலாளர் விக்னேஷ்வரன் கலந்து கொண்டார். இந்த விருதை கல்லுாரி முதல்வர் சரவணகுமார், தாளாளர் சந்திரசேகரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !