குழந்தை நலன் பேணி காக்கும் நிறுவனங்களுக்கு விருது
ஈரோடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணி காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு, 'முன்மாதிரியான சேவை விருதுகள்', 4 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படுகிறது.அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், என்.ஜி.ஓ., மூலம் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள், சட்டத்துக்கு முரண்பட்டதாக கருதப்படும் சிறார்களுக்கான குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் என, 4 பிரிவுக்கும் தலா, ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும். தகுதியான நிறுவனங்கள், இவ்விருது பெற, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டடம், 6 வது தளம், ஈரோடு' என்ற முகவரியில் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.