பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
காங்கேயம், காங்கேயம் நகரில் ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் மற்றும் டிராவல்ஸ் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கான கண், ரத்தம், உடல் பரிசோதனை உட்பட பால்வினை பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.இதை தொடர்ந்து விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடத்தப்பட்டு, மக்களுக்கு பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் காங்கேயம் நகர ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.