விழிப்புணர்வு பேரணி
ஈரோடு,: ஈரோடு மாநகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நேற்று நடந்தது. ஈரோடு சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லுாரி அருகே பேரணியை, கமிஷனர் அர்பித் ஜெயின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அரசு கல்லூரியில் தொடங்கி சத்தி சாலை, வீரப்பன் சத்திரம் வழியாக பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது. என்.எஸ்.எஸ்., மாணவ--மாணவிகள், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம், நீர், நிலம், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் தவிர்ப்போம். துணி பைகளை பயன்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர். துணை மேயர் செல்வராஜ், துணை கமிஷனர் தனலட்சுமி, மண்டல தலைவர் பழனிச்சாமி, உதவி கமிஷனர் சரோஜா தேவி, கவுன்சிலர் ரவி கலந்து கொண்டனர்