உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, பழையபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிறைவடைந்தது. பின், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டி, எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு நடந்த வினாடி - வினா போட்டி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு இடையே நடந்த மாரத்தான் போட்டிகளில், வென்றவர்களுக்கு பரிசு, சான்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை