பெண் குழந்தைகளை காக்க விழிப்புணர்வு
ஈரோடு, செப். 20-அங்கன்வாடி பணியாளர்களுக்கான, 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் கவிதா தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுதா முன்னிலை வகித்தனர்.இத்திட்டத்தில் அனைத்து துறையினரும் தங்கள் பங்களிப்பை செயல்படுத்த வேண்டும். தகுதியானவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் உயர் கல்வி உறுதி திட்ட பயன் கிடைக்க வழி செய்ய வேண்டும். குழந்தை திருமண தடை சட்டத்தை முறையாக அமலாக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகள் சந்தித்து வரும் பிரச்னைகள், மருத்துவம் சார்ந்த சிக்கல்கள், குழந்தை திருமணம் தடுப்பு, பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பை தடுப்பதன் யுக்திகள் பற்றி தெரிவித்தனர். குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ சட்டம், அச்சட்டத்தில் குழந்தைகளுக்கு நேரிடும் பிரச்னைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு கிடைக்கும் தண்டனைகள், அபராதங்கள் பற்றியும் பேசினர்.