மேலும் செய்திகள்
காவல் நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த குப்பை
01-Jan-2025
சென்னிமலை: சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. அங்கு கோனாரிகாடு என்ற இடத்தில், ஆற்றின் இடது கரையில் செடி, கொடிகளில் நேற்றிரவு, 7:30 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் மரங்களுக்கு பரவி பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு கிளம்பியது. அவ்வ-ழியே சென்றவர்கள் பார்த்து, சென்னிமலை தீயணைப்பு நிலை-யத்துக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்தனர். தீப்பிடித்த இடத்துக்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் கூடுதலாக குழாய்களை பொருத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் மூன்று பனை மரம், முள்வேலி எரிந்து விட்டது.
01-Jan-2025