டூவீலர்கள் மோதலில் பேக்கரி ஊழியர் பலி
பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த கொக்கரக்குண்டியை சேர்ந்தவர் பிரதீப், 27; அதே பகுதியில் உள்ள சக்தி பேக்கரி ஊழியர். நேற்று மதியம் ஹோண்டா சைன் பைக்கில் பவானிசாகர்-சத்தி சாலையில் சென்றார். தயிர் பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே எதிரே கோவையை சேர்ந்த ஜெயந்த், 21, ஓட்டி வந்த யமஹா எப் ஜெட் பைக், பிரதீப் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இரு-வரும் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் பிரதீப் உயிரிழந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பின் கோவை அரசு மருத்துவமனைக்கு ஜெயந்த் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.