பஸ் இயக்க பாலாஜி கார்டன் குடியிருப்போர் சங்கம் மனு
ஈரோடு, திண்டல், பாலாஜி கார்டன் குடியிருப்போர் சங்கம் சார்பில், தலைவர் அர்த்தனாரி, செயலர் வாசுதேவன், நிர்வாகிகள் சசிசேகரன் உட்பட பலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திண்டலில் இருந்து பாலாஜி கார்டன் வழியாக ரங்கம்பாளையத்துக்கு நகர பஸ் காலை, 2 முறை, மாலை, 2 முறை இயக்க வேண்டும். கடந்த, 2023 டிச.,30ல் ரங்கம்பாளையத்தில் நடந்த சிறப்பு முகாமில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. முதியவர்கள், உடல் நலம் பாதித்தோர், பள்ளி, கல்லுாரி செல்வோர் பிற வாகனங்களை நாட வேண்டி உள்ளது. பாதுகாப்பில்லாத சூழலும் உள்ளதால், பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.