உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்

யானையால் வாழை சேதம்டி.என்.பாளையம், நவ. 27--டி.என்.பாளையம் அருகே பெருமுகை, வலையபாளையம் மேட்டுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 58; தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை, நேற்று அதிகாலை வாழை தோட்டத்தில் புகுந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மதித்தும், தின்றும் சேதப்படுத்தியது. யானையால் இப்பகுதியில் அவ்வப்போது பயிர் சேதம் ஏற்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை