உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழை இலை விலை கிடுகிடு

வாழை இலை விலை கிடுகிடு

ஈரோடு: ஈரோட்டில் நேதாஜி, காமராஜர் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாழை இலை விற்பனைக்கு வருகிறது. ஐப்பாசி மாத முகூர்த்தங்கள் எதிரொலியால், வாழை இலை விலை உயர்ந்துள்ளது.பெரிய இலை ஒரு கட்டு (200 இலை கொண்டது), 1,500 ரூபாய் முதல், 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களுக்கு வினியோகிக்கப்படும் சாப்பாடு இலை, 5ல் இருந்து 8 ரூபாயாக, டிபன் இலை, 2ல் இருந்து 4 ரூபாயாக உயர்ந்து விட்டது.இதுகுறித்து வாழை இலை வியாபாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வாழை இலை வரத்து குறைந்துள்ளன. அதேசமயம் ஐப்பசி மாத முகூர்த்தம் தொடங்கி விட்டதால், இலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது. நல்ல பெரிய இலை கட்டு கிடைப்பதே சிரமமாக உள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ