உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவில் ஊழியர் மர்மச்சாவு

பண்ணாரி கோவில் ஊழியர் மர்மச்சாவு

பண்ணாரி கோவில் ஊழியர் மர்மச்சாவுசத்தியமங்கலம், நவ. 22-சத்தியமங்கலம் அடுத்த ராஜன்நகரை சேர்ந்தவர் ஜெயபூர்ணம், 57; பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் இளநிலை உதவியாளராக, 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நண்பரான கோபியை சேர்ந்த கவுரி சங்கருடன், நேற்று முன்தினம் ஆசனுார் சென்றார். அங்கு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். நேற்று காலை ஜெயபூர்ணம் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதனால், 108 அவசர கால ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். வாகனத்தில் வந்த மருத்துவ ஊழியர் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவர் சாவுக்கான காரணம் குறித்து, ஆசனுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி