தாராபுரத்தில் பேனர்கள் அகற்றம்
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்களை, நகராட்சி ஊழியர்கள் நேற்று அப்புறப்படுத்தினர்.தாராபுரம் நகரில், பெரிய கடை வீதி, பஸ் நிலையம் மற்றும் பழைய நகராட்சி அலுவலக பகுதிகளில், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில், விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் முஸ்தபா உத்தரவின்படி, நகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை, நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.