மேலும் செய்திகள்
அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்
14-Oct-2024
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேரிகார்டுசென்னிமலை, அக். 18--சென்னிமலையில் அதிகரித்து விட்ட போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, பெருந்துறை போக்குவரத்து போலீசார், சென்னிமலை நகர பகுதியில் முகாமிட்டனர்.சென்னிமலை குமரன் சிலை முன் ஒருவழி பாதையாக இருந்ததை பேரிகார்டு அமைத்தும், பிளக்ஸ் பேனர் வைத்து வழக்குப்பதிவு செய்து விழிப்புணர்வு செய்தனர். தெற்கு ராஜ வீதிகளில் பேரிகார்டு அமைத்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் மெதுவாக செல்லும்படி செய்துள்ளனர்.இதனால் தற்காலிக நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றுவது, சென்னிமலை ரிங் ரோடு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதே, போக்குவரத்து நெரிசலை குறைக்க நிரந்தர தீர்வாக இருக்கும். இதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் தெரிவித்துள்ளனர்.
14-Oct-2024