மேலும் செய்திகள்
ரூ.60 கோடியில் தடுப்பணை பணிகள் தீவிரம்
28-Mar-2026
கோபி, கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் நேற்று முன்தினம், 500 கன அடி தண்ணீர் வெளியேறியது. இந்நிலையில் கொடிவேரியில், 9.80, பவானிசாகரில், 17 மி.மீ., என நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால் தடுப்பணை வழியாக நேற்று காலை, 8:30 மணிக்கு, 850 கன அடி மழைநீர் வெளியேறியது. இதனால் காலை, 8:30 மணி முதல், கொடிவேரி தடுப்பணைக்குள், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து, 500 கன அடியாக குறைந்த பிறகே, சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என நீர் வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.
28-Mar-2026