உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பீன்ஸ் கிலோ ரூ.120

பீன்ஸ் கிலோ ரூ.120

ஈரோடு,:ஈரோடு தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஈரோடு மார்க்கெட்டிற்கு தினமும், 2 டன் வரை பீன்ஸ் வரத்தாகும். நேற்று ஒரு டன்னாக வரத்து குறைந்ததால், கடந்த வாரம் கிலோ, 88 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், 120 ரூபாயாக விலை உயர்ந்தது. மார்க்கெட்டில் பிற காய்கறி விலை விபரம் (கிலோ-ரூபாயில்): சின்ன வெங்காயம்-100, பெரிய வெங்காயம்-75, இஞ்சி-60, முருங்கைக்காய்-80, பச்சை மிளகாய்-80, கருப்பு அவரை-90, பெல்ட் அவரை-80, கேரட்-60, பீட்ரூட்-70, கருணை கிழங்கு-80, பாவற்காய்-60, வெள்ளை பூசணி-25 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி