மேலும் செய்திகள்
'ஹார்டுவேர்' இலவச பயிற்சி வகுப்பு
16-Nov-2025
பிளம்பிங் இலவச பயிற்சி ஆர்வமுள்ளோருக்கு அழைப்பு
02-Nov-2025
திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில், கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, 30 நாட்கள் ஆண்களுக்கான அழகு கலை பயிற்சி, நாளை துவங்குகிறது. இலவச பயிற்சியில் சேர ஆர்வமுள்ள, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் பயிற்சியாளர்கள் தங்க விடுதி வசதி உள்ளது. உணவு, தேநீர் வசதி இலவசம்.பயிற்சி நிறைவாக, மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்குவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும். இலவச பயிற்சியில் சேர, 'கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் அருகில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர்' என்ற முகவரிக்கு, நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு, 94890 43923, 90804 42586 என்ற எண்களில் அணுகலாம்.
16-Nov-2025
02-Nov-2025