தேனீ வளர்ப்பு கருத்தரங்கு
ஈரோடு, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், சென்னை மாநில அலுவலகம், ரீடு நிறுவனம் இணைந்து, ஈரோடு மாவட்டம், ஆசனூரில், தேனீ வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. ரீடு நிறுவன ஆவண அலுவலர் பூந்தமிழன் வரவேற்றார். ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி தொடக்க உரையாற்றினார்.சாரு மேல்நிலைப் பள்ளி கல்வி இயக்குர் போஸ்கோ இறையன்பு, ஆசனுார் எஸ்.ஐ.,முருகேசன், வாழ்த்து வழங்கினர். சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் யோகேஷ் குமார் கார்க், தேனீ வளர்ப்பு மற்றும் வனவழி வாழ்வாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் இணை இயக்குநர் வாசுராஜன், தேனீ வளர்ப்பு திட்டத்தின் வாயிலாக கிராமத் தொழில் முயற்சி மற்றும் நிலையான முன்னேற்றம் குறித்து விளக்கி பேசினார். ரீடு நிறுவன திட்ட மேலாளர் பழனிசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட மேலாளர் பழனிச்சாமி, பூந்தமிழன், திட்ட அலுவலர் சிவராஜ், சரவணக்குமார், ரம்யா மற்றும் செல்வி கிருத்திகேஸ்வரி செய்திருந்தனர்.