மாநில தடகள போட்டியில் பாரதி மெட்ரிக் பள்ளி அபாரம்
பெருந்துறை: பள்ளிக்கல்வி துறை சார்பாக, மாநில அளவிலான, 65-வது குடிய-ரசு தின தடகளப்போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில் பெருந்து-றையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவன் சிரதீப், இளையோர் பிரிவில், 400 மீ., ஓட்-டத்தில் வெள்ளி, இளையோர், ௪௦௦ மீ., தொடர் ஓட்டத்தில் காவி-யானந்த், சிரதீப், நிஷாந்த், அஜிஸ்ராஜ் குழு வெண்கல பதக்கம், மூத்தோர் 4௦௦ மீ., தொடர் ஓட்டத்தில் நித்தின்ராஜ், சரண், சந்தீஸ், நவீன் வெண்கல பதக்கம் பெற்றனர். இதன் மூலம் பள்ளி மாணவர் சிரதீப், தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வக்குமார், சத்தியமூர்த்தியை, பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.