உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 21 பேரிடம் ரூ.21.93 லட்சம் மோசடி பவானி தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

21 பேரிடம் ரூ.21.93 லட்சம் மோசடி பவானி தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

ஈரோடு, அரசு வேலை வாங்கி தருவதாக, 21.93 லட்சம் மோசடி செய்த, பவானியை சேர்ந்த நபருக்கு, நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு, திண்டல், செங்கோடம்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 55; ஆதி திராவிட நலத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 2012ல் மோசடி செய்து பணம் பெற்ற பவானியை சேர்ந்த நபர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பணத்தை திரும்ப கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, 2013ல் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து வழக்குப்பதிந்தனர். இதில் ராஜலட்சுமி மட்டுமின்றி 21 பேரிடம், 21.௯௩ லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஆதி திராவிட நலத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியதால், பணம் கொடுத்ததாக போலீசில் புகாரளித்தனர். இப்புகார்களையும் போலீசார் ஒன்றிணைத்தனர். விசாரணையில், இவர்களுக்கு தமிழக அரசின் முத்திரை போட்ட போலி நியமன சான்றிதழை வழங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக பவானி, கல்பாவி, முத்து ரெட்டியூர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி முனியப்பன், 41, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.இந்த வழக்கு விசாரணை, ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் எண்-2ல் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி மோசடி செய்த முனியப்பனுக்கு, நான்காண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கோவை மத்திய சிறையில் முனியப்பன் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ