மேலும் செய்திகள்
பவானிசாகர் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
09-Oct-2026
புளியம்பட்டி: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நீர்வரத்து, 3,716 கன அடியாக இருந்த நிலையில், 4,827 கன அடியாக நேற்று காலை அதிகரித்தது. அணை நீர்மட்டம், 58 அடியில் இருந்து, 60 அடியாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 60.40 அடி, நீர் இருப்பு 7.3 டி.எம்.சி.,யாக இருந்தது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
09-Oct-2026