உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணைக்குள் போட்ட கல்லாக மொபைல் போன் தொடர்புக்கு அப்பால் பவானிசாகர் ஸ்டேஷன்

அணைக்குள் போட்ட கல்லாக மொபைல் போன் தொடர்புக்கு அப்பால் பவானிசாகர் ஸ்டேஷன்

பவானிசாகர்: ஈரோடு மாவட்டத்தில் சத்தி போலீஸ் சப்-டிவிஷனில், புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனுார், கடம்பூர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிக்க, இந்த ஸ்டேஷன்களுக்கு 'சி.யு.ஜி.,' வசதி கொண்ட மொபைல்போன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷன் மொபைல் எண் மட்டும், தொலை தொடர்புக்கு அப்பால் உள்ளது. இதனால் புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்ட எல்லையான தெங்குமரஹடா வரை வனப்பகுதியை ஒட்டி கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். புகார் மற்றும் தகவல் தெரிவிக்க, 94981-01215 என்ற மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த எண் செயல்படாமல், கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.மாற்றமாகியுள்ள எண்கள்சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் மொபைல் எண் (94981-01246), புளியம்பட்டி (94981-01245), தாளவாடி, (94981-01249), ஆசனுார் (94981-01233), கடம்பூர், (94981-01235) ஆகிய ஸ்டேஷன்களின் மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளது. அதே சமயம் முன்பு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசி எண்கள் (04295 என துவங் கும்) அனைத்தும், இன்டர்நெட் இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த பகுதி மக்கள், புகார் அல்லது கடத்தல் அல்லது வேறு ஏதேனும் தகவல் தெரிவிக்க மற்றும் பெறவேண்டுமானால், போலீசாரை இந்த மொபைல் எண்களில் தொடர்பு கொண்டால், உரிய உதவி மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை