உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்கை மறித்து பணம் பறிப்பு

பைக்கை மறித்து பணம் பறிப்பு

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் பொன்னுசாமி வீதியை சேர்ந்தவர் சுந்தரம், 45; ஈரோடு ஏ.பி.டி., சாலையில் கடந்த, 11 மதியம் பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், சுந்தரம் பைக்கை வழிமறித்து நிறுத்தினர். கட்டையால் முகம், தலையில் தாக்கியுள்ளனர். அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, ரெட்மீ மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். காயமடைந்த சுந்தரம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை