உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் -- ஸ்கூட்டர் மோதல் பாசூரை சேர்ந்த பெண் பலி

பைக் -- ஸ்கூட்டர் மோதல் பாசூரை சேர்ந்த பெண் பலி

ஈரோடு;ஈரோடு பாசூரை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி மணிமேகலை, 57. இருவரும் நேற்று மாலை ஈரோடு-கரூர் சாலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், லக்காபுரம் பரிசல்துறை ரோடு அமிர்தானந்தமயி பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தனர்.அப்போது பின்னால் அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு பைக்கில் வந்தவர் மோதினார். இதில் ஸ்கூட்டரில் இருந்து தம்பதியினர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவரும் காயமடைந்தனர். மொடக்குறிச்சி போலீசார், காயமடைந்த இருவரையும், ஆம்புலன்சில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மணிமேகலை இறந்தார். விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து பைக் ஓட்டியவர் தப்பியதால், அவர் யார் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை