உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீரமைப்பு பணிக்கு வனத்துறை இடையூறு பா.ஜ.,வினர் கலெக்டரிடம் முறையீடு

சீரமைப்பு பணிக்கு வனத்துறை இடையூறு பா.ஜ.,வினர் கலெக்டரிடம் முறையீடு

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் தலைமையில், கலெக்டர் அலுவலகம் மற்றும் ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது. மலைப்பாதையில் தரமான தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அறநிலையத்துறை சார்பில் நடக்கும் பணியில், வளைவுகளில் அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இதற்கு வனத்துறை ஒப்புதல் அளிக்காததுடன், செப்பனிடும் பணியை பாதியில் நிறுத்திவிட்டனர். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல், 1,400க்கும் மேற்பட்ட படிகளில் ஏறி செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். வாகனங்களை மலை மீது நிறுத்தும் இடத்திலும், பூஜை பொருள் விற்பனை செய்தல் போன்றவைகளிலும் வனத்துறை தடை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு, நடவடிக்கை எடுத்து மலைப்பாதை சீரமைப்பை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை