கலெக்டரிடம் பா.ஜ., மனு
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., பொது செயலர் புனிதம் ஐயப்பன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியது:ஊராட்சிகோட்டை குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும், பல பகுதிகளில் செயல்படாமல் உள்ளது. குடிநீர் திட்டத்துக்கு மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய பிறகும், வீடுகளுக்கு குழாய் அமைத்து, வினியோகம் துவங்கவில்லை. இணைப்பு வழங்கிய இடங்களிலும் சரியான நேரத்தில், தேவையான அளவு வழங்கப்படவில்லை. தண்ணீர் திறப்பு, அடைப்பு நேரம், நாள் ஆகியவற்றை குறித்து ஒரு அட்டவணை தயார் செய்து, அதன்படி தண்ணீரை திறக்க வேண்டும். இணைப்பு வழங்காத பகுதிகளுக்கு இணைப்பு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.