மேலும் செய்திகள்
கோவை வருமான வரித்துறை கலந்தாய்வு கூட்டம்
27-Jun-2025
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரிகளை குறைக்க வலியு-றுத்தி, தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்-றுகையிட்டனர். போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காததால், மாநக-ராட்சி நுழைவு வாயில் பகுதியில் மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்-தினர். இதனால் வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு, 6 சதவீத உயர்வு என்பதை திரும்ப பெற வலியுறுத்தினர். போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட, 17 பெண்கள் உட்பட, 91 பேரை கைது செய்தனர்.
27-Jun-2025