உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் ஏரியில் படகு இல்லம் திறப்பு

அந்தியூர் ஏரியில் படகு இல்லம் திறப்பு

அந்தியூர்: அந்தியூர் பெரிய ஏரியில், 50 லட்சம் மதிப்பில், பொழுது போக்கு அம்சங்களுடன் படகு இல்லம் அமைக்ககும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. பணி நிறைவடைந்த நிலையில், படகு இல்லத்தை மக்கள் பயன்பாட்டுக்காக, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார்.அந்தியூரில் நடந்த விழாவில், எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், முதல்வருக்கு நன்றி தெரிவித்து, குத்து விளக்கு ஏற்றினார். இதையடுத்து சுற்றுலா துறை அதிகாரிகளுடன், எம்.எல்.ஏ., உள்ளிட்ட சிலர் ஏரியில் படகு சவாரி சென்றனர்.தற்போது நான்கு பேர் அமரக்கூடிய படகு நான்கு, இரண்டு பேர் அமரக்கூடிய படகு இரண்டு உள்ளது. காலில் பெடல் போட்டு மட்டுமே படகை இயக்க முடியும். பேரூராட்சி நிர்வாகம் சார்பில், டென்டர் விடப்பட்டு அதன் பிறகே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, ஏரியில் படகு சவாரி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !