உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி ஆற்றில் மூழ்கிய ஓட்டுனர் சடலம் மீட்பு

பவானி ஆற்றில் மூழ்கிய ஓட்டுனர் சடலம் மீட்பு

புன்செய் புளியம்பட்டி: கோவை, பேரூர் செட்டிளையத்தை சேர்ந்த வாடகை வாகன ஓட்டுனர் அபுதாகீர், 40; நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர் பூங்காவுக்கு வந்தார். பூங்கா எதிரே பவானி ஆற்றில் இறங்கி அனைவரும் குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அபுதாகீர், நீச்சல் தெரியாமல் மூழ்கி மாயமானார். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடிய நிலையில், இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் தேடும் பணி தொடங்கியது. பூங்கா அருகே வட்டப்பாறை என்ற இடத்தில் முட்புதரில் அபுதாகீர் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட பவானிசாகர் போலீசார், சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி