மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு
04-Feb-2025
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, பழைய ரயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு சில வீடுகள் இடிக்கப்பட்டும், சில வீடுகள் இடிக்கப்படாமலும் உள்ளன. வடமாநில வாலிபர் இறந்து கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த வாலிபரின் சட்டை, பேண்ட்டில் சோதனை செய்தனர். இறந்த நபரின் ஆதார் கார்டு இருந்தது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தண்டபாணி சபார், 31, என தெரியவந்தது. கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், கைகளில் வெட்டு காயம் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரிந்தது. மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்துக்கு வட மாநில வாலிபர் சென்றாரா? அல்லது மர்ம நபர்கள் அழைத்து சென்று கொலை செய்தனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.மோப்ப நாய் காவிரியும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே கொலையா? அல்லது வேறு காரணம் உள்ளதா என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
04-Feb-2025