உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு

வாய்க்காலில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு

சென்னிமலை, வெள்ளோட்டை அடுத்த கருக்கங்காட்டுவலசை சேர்ந்தவர் அலெக்ஸ், 24; சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனி ஊழியர். அதே பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் மாலை குளித்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளோடு போலீசார், சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்களுடன் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், இரவானதால் பணி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்றும் தேடும் பணி தொடர்ந்தது. அவர் குளித்த இடத்தில் இருந்து, ௫ கி.மீ., துாரத்தில், வெள்ளிவலசு என்ற இடத்தில், அலெக்ஸ் சடலத்தை தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று மதியம் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை