உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மூழ்கி பலியான தனியார் கண்டக்டர் உடல் மீட்பு

வாய்க்காலில் மூழ்கி பலியான தனியார் கண்டக்டர் உடல் மீட்பு

வாய்க்காலில் மூழ்கி பலியானதனியார் கண்டக்டர் உடல் மீட்புபவானி, செப். 27-சேலம் மாவட்டம் வடுகப்பட்டி அருகேயுள்ள தட்டாப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 38; தனியார் பஸ் கண்டக்டர். நண்பர்கள் வைத்தீஸ்வரன், கமல், புவனேஸ்வரன், சீனி ஆகியோருடன், சித்தோடு, கோணவாய்க்கால் கன்னிமார் கோவில் அருகே காலிங்கராயன் வாய்க்காலில், கடந்த, 23ம் தேதி குளித்தார். அப்போது மது போதையில் இருந்த பழனிச்சாமி, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியிலிருந்து, 40 கி.மீ., தொலைவில் மலையம்பாளையத்தில், அழுகிய நிலையில் பழனிச்சாமியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ