உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆசாமியை தேடும் போலீஸ்

போலீஸ் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆசாமியை தேடும் போலீஸ்

புன்செய்புளியம்பட்டி, போலீஸ் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசாருக்கான குடியிருப்பு, மேட்டுப்பாளையம் சாலை கோட்டை கோவில் அருகில் உள்ளது.காவல்துறையின் மாஸ்டர் கண்ட்ரோல் அறை தொலைபேசி எண்ணை, நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட ஆசாமி, பவானிசாகர் போலீஸ் குடியிருப்பில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு வரவழைக்கப்பட்டு, குடியிருப்பு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியதில் பொய் தகவல் என உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து போலீசார் விசாரணையில், வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர், பவானிசாகரை சேர்ந்த நவீன்ராஜ், 36, என்பதும், கோவை, சிங்காநல்லுார் பகுதியில் தங்கி இருப்பதையும் கண்டறிந்து, அவர் மீது வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ