உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் தனியார் பள்ளி, ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் தனியார் பள்ளி, ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு:ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு, இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோட்டில் பூந்துறை சாலையில் உள்ள, தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக, பள்ளி நிர்வாகத்தினர் ஈரோடு தாலுகா போலீசில் நேற்று புகார் செய்தனர்.தாலுகா போலீசார், திருப்பூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவினர் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதனால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவ, மாணவியரை, பின்பக்க கதவு வழியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையறிந்த பெற்றோர், பள்ளி முன் பதற்றத்துடன் குவிந்தனர். பள்ளி முதல்வர் பெயருக்கு, நேற்று முன்தினம் மாலையே, இமெயிலில் மிரட்டல் வந்துள்ளது. அவர் நேற்று காலையில் தான் பார்க்க, உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது. கடந்த செப்., மாதம் இதேபோல் பள்ளிக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.போலீஸ் விசாரணையில் அதே பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் அனுப்பியது தெரிந்து எச்சரிக்கப்பட்டனர்.தற்போது இரண்டாவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலால், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பீதி அடைந்தனர்.ஓட்டலுக்கு...ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே வீர பத்ர வீதியில் தி ரத்னா ரெசிடென்சி உள்ளது. இங்கு, 39 அறைகள் உள்ளன. உணவு சாப்பிடும் வசதியும் உள்ளது. தற்போது, 25 பேர் ஓட்டல் அறையில் தங்கி உள்ளனர். நேற்றிரவு, 7:25 மணிக்கு ஓட்டல் மெயிலுக்கு தகவல் வந்தது. அதில் இரவு, 10:00 மணிக்குள் வெடிகுண்டு ஓட்டலில் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர், வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ