உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனியார் பள்ளிக்கு குண்டு மிரட்டல்

தனியார் பள்ளிக்கு குண்டு மிரட்டல்

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துகோம்பையில், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இ-மெயிலில் பள்ளியில் குண்டு வைத்திருப்பதாக நேற்று காலை தகவல் வந்திருந்துத. பள்ளி நிர்வாகத்தினர் சத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோட்டில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாயுடன் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். இதனால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சோதனை நிறைவில் பொய் என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து, விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி