பூத் எண்ணிக்கை 2,378 ஆக உயர்வு
ஈரோடுஅனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 தொகுதிகளில் ஏற்கனவே, 2,222 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது, 156 புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, 2,378 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரதிநிதிகள், தங்கள் கருத்துக்களை தெரிவித்தால், அதற்கேற்ப ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள லாம் என்று கலெக்டர் கேட்டு கொண்டார். கூட்டத்தில் எஸ்.பி., சுஜாதா, கோபி சப் கலெக்டர் சிவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.