உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செங்கல் சூளை உரிமையாளர் ஆலோசனை

செங்கல் சூளை உரிமையாளர் ஆலோசனை

அந்தியூர்: ஈரோடு மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், அந்தியூர் அருகே சின்னத்தம்பிபாளையத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோபி, அந்தியூர், பவானி தாலுகா பகுதிகளை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். செங்கல் உற்பத்தி செய்வதற்கு தற்போதுள்ள பல்வேறு கட்டுப்பாடு, பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் செங்கல் விற்பனை விலை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்தியூர் ரவுண்டானாவில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை