மலைப்பாதையில் பழுதான லாரி; போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலம்:கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிய ஒரு டாரஸ் லாரி, காங்கேயத்துக்கு புறப்பட்டது. சத்தியமங்கலம் செண்பகபுதுாரை சேர்ந்த ரஞ்சித் ஓட்டினார். திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை, 10:30 மணியளவில் லாரி வந்தது. 25வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது ஆக்சில் கட்டாகி பிரேக் டவுன் ஆனது. இதனால் மலைப்பாதையில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதை நீக்கிய பிறகு, 12:30 மணிக்கு லாரி கிளம்பியது. இதனால் மலைப்பாதையில், 2:00 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.