மேலும் செய்திகள்
வழியில் நின்ற அரசு பஸ்: பயணிகள் தவிப்பு
21-Aug-2025
ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம் நுழைவு பாலத்தின் இரும்பு தடுப்பில், அரசு டவுன் பஸ் சிக்கி கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஈரோட்டை அடுத்த அஞ்சுராம்பாளையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் எண். 46 நேற்று காலை ஈரோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி, கொல்லம்பாளையம் நுழைவு பாலத்தின் வழியே செல்ல முற்பட்டது. அப்போது சாலையின் குறுக்கே இருந்த, இரும்பு தடுப்பு கம்பியில் பஸ் அதிக உயரம் காரணமாக சிக்கி கொண்டது. முன் நோக்கியும் செல்ல முடியவில்லை. பின்னோக்கியும் வர முடியவில்லை. காலை பீக் அவர்ஸ் நேரமான 9:15 மணிக்கு சிக்கி கொண்டது. இதனால் அங்கு டூவீலர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் 1 கி.மீ., துாரத்துக்கு அணிவகுத்து நின்றன.தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார், போக்குவரத்து போலீசார் சென்றனர். பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் பஸ் சக்கரத்தின் காற்றை சிறிதளவு பிடுங்கி விடப்பட்டது. இதனால் பஸ் உயரம் சற்று கீழிறங்கியது. பின்னர் மெதுவாக பஸ் அங்கிருந்து நகர்ந்து சென்றது. 9:40 மணிக்கு பஸ் நகர்ந்த பின் மெல்ல, மெல்ல போக்குவரத்து சீரானது.
21-Aug-2025