மொடக்குறிச்சியில் இருந்து புது வழியில் பஸ் இயக்கம்
ஈரோடு :மொடக்குறிச்சியில் இருந்து புதிய வழித்தடத்தில் பஸ் சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.ஈரோடு - சோலார் - மொடக்குறிச்சி - எழுமாத்துார் - முத்துார் - தாராபுரம் - பழனி என்ற வழித்தடத்தில் இயங்கும் வகையில் அரசு புதிய பஸ் சேவையை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். ஈரோடு மார்க்கமாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், அரசு போக்குவரத்து பொது மேலாளர் சிவகுமார் பங்கேற்றனர்.